ஒவ்வொரு இந்தியனுக்கும் ரூ.15 லட்சம் கிடைப்பது எப்போது? மோடி அளித்த உறுதி குறித்து ஆர்.டி.ஐ தகவல்

ஒவ்வொரு இந்தியனுக்கும் ரூ.15 லட்சம் கிடைப்பது எப்போது? மோடி அளித்த உறுதி குறித்து ஆர்.டி.ஐ தகவல்

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது, வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் அக்கவுண்டிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதி என்ன ஆயிற்று என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் அலுவலகம் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்த கறுப்புப்பணத்தை மீட்டால் ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ‘தகவல்’ என்ற அம்சத்தின் கீழ் வராது.

அதுமட்டுமல்லாமல், தகவல் அறியும் உரிமைச்சட்டம் பிரிவு 2ன்படி தகவல் என்பது, ஆவணங்களாகவோ மின் அஞ்சல், கருத்துக்கள் ஆலோசனைகள், பத்திரிகை குறிப்புகள், ஒப்பந்தங்கள் அல்லது மின்னணு வடிவத்தில் இருக்க வேண்டும். அவ்வாறு பிரதமர் மோடி எந்தவடிவத்திலும் மக்களுக்கு வாக்கறுதி அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

Leave a Reply