கருப்பு பெட்டி கிடைத்தாலும் இனி பயன் இல்லை. அமெரிக்க மீட்புப்படை தகவல்

black box

மாயமான மலேசிய விமானம் என்ன ஆனது என்று தெரியாத நிலையில் அமெரிக்க கடற்படை இன்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் “விமானம் ஒரு வேளை கடலில் விழுந்திருந்தால் அதை கண்டுபிடிக்க பல வருடங்கள் ஆகலாம் என்றும் கருப்பு பெட்டி இனி கிடைத்தாலும், அதனால் ஒன்றும் பயன் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டறிய நீர்மூழ்கிக் கருவி உள்ளடங்கிய கப்பலை பயன்படுத்தி தேடிவரும் அமெரிக்கா, வரும் ஏப்ரல் 8ஆம் தேதியுடன் கருப்புப்பெட்டியின் பேட்டரி செயலிழந்துவிடும். பேட்டரி செயலிழந்த பின்னர், அந்த கருப்புப்பெட்டி கிடைத்தாலும், அதிலிருந்து எதுவும் தகவல் எடுக்க முடியாது என்று கூறியுள்ளது.,

எனினும் கருப்புப் பெட்டியின் பேட்டரி செயலிழப்பதற்கு முன்னரே அதை கண்டுபிடிக்க தீவிர முயற்சி செய்யப்பட்டு வருகிறது என்றும் கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply