நேதாஜியின் தங்கப்பல் இருப்பது எங்கே? இங்கிலாந்து இணையதளம் தகவல்

நேதாஜியின் தங்கப்பல் இருப்பது எங்கே? இங்கிலாந்து இணையதளம் தகவல்

nethajiகடந்த சில நாட்களாக இங்கிலாந்து இணையதளம் ஒன்று நேதாஜி குறித்த பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது நேதாஜியின் தங்கப் பல் எங்கே இருக்கின்றது என்பது குறித்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளது.

 இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் ‘www.bosefiles.info’ என்ற இணையதளம் நேதாஜியின் மரணம் குறித்த பல்வேறு ஆவணங்களை  கடந்த சில வாரங்களாக்க வெளியிட்டு வருகிறது. அதில் தைவான் விமான விபத்து குறித்து பல்வேறு பகுதிகளாக ஆவணங்களாக வெளியாகி வந்தது. அதில் விமான விபத்தில் ஏற்பட்ட காயத்தில் தான் நேதாஜி உயிரிழந்ததற்கான ஆதரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தை சுயசார்பு பத்திரிகையாளரும், நேதாஜியின் உறவினருமான ஆஷிஸ் ரே நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் உள்ள கோவில் ஒன்றில் நேதாஜி அணிந்திருந்த தங்கப் பல் இருக்கலாம் என்று இங்கிலாந்து இணையதளம் இன்று தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உதவியாளர் முகாமில் இருந்தவர் கலோனல் ஹபிபுர் ரெஹ்மன். இவரும் நேதாஜி இறந்ததாக கருதப்படும் தைவான் விமான விபத்தில் உடன் இருந்தவர். 1978-ம் ஆண்டு இறந்த ரெஹ்மான், நேதாஜியின் தங்கப்பல் குறித்த தகவலை தன்னுடைய மகன் நயிமுரிடம் கூறியுள்ளார்.

ரெஹ்மானின் ஜூனியர் இந்த தகவலை இங்கிலாந்தில் இணையதளத்தை நடத்தி வரும் அஷிஷ் ரேவிடம் இஸ்லாமாபாத்தில் 1990-களில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். நேதாஜியின் உடலை எரித்த ஜப்பான் அதிகாரிகளிடம் இந்த தங்கப்பல் கொடுக்கப்பட்டது என்பது தான் அந்த தகவல்.

Leave a Reply