வடகொரிய அதிபரின் மனைவி எங்கே? 7 மாதங்களாக புரியாத புதிர்

வடகொரிய அதிபரின் மனைவி எங்கே? 7 மாதங்களாக புரியாத புதிர்

northkoreaவடகொரிய அதிபர் அந்நாட்டின் அதிபர் மாதிரி இல்லாமல் சர்வாதிகாரியாகவும் உள்ளார். மேலும் அமெரிக்கா உள்பட உலக நாடுகளுக்கு அணு ஆயுத அச்சுறுத்தலும் செய்து வருகிறார்.

இந்நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங்-யங் அவர்களின் மனைவி கடந்த 7 மாதங்களாக காணவில்லை என்ற தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் கிம் ஜாங்-யங் தனது தங்கையை நாட்டைவிட்டு வெளியேற்றியது போல மனைவியையும் வெளியேற்றிவிட்டாரா? அல்லது கர்ப்பமாக இருப்பதால் வெளியே வராமல் உள்ளாரா? என்பது குறித்து உள்ளூர் ஊடகங்களால் கூட ஊகிக்க முடியவில்லை.

அதிபரின் மனைவி உயிருடன் இருக்கின்றாரா? அப்படி இருந்தால் அவர் எங்கே இருக்கின்றார் என்று அறிவிக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கையை அதிபர் ஏற்றுகொள்வாரா? என்பது தெரியவில்லை.

Leave a Reply