காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் தனக்கு நான்கு வார காலம் ஓய்வு தேவை என்று அனுமதி பெற்றுள்ள ராகுல்காந்தி தற்போது எங்கு இருக்கின்றார் என்பது குறித்த கேள்விகள் காங்கிரஸ் கட்சியை நோக்கி பல திசைகளில் இருந்தும் வந்து கொண்டிருக்கின்றது.
காங்கிரஸ் தொண்டர்களும் ராகுல்காந்தி எங்கிருக்கின்றார், மீண்டும் அரசியலுக்கு வருவாரா? என்ற சந்தேகத்தில் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெகதீஷ் குமார் ஷர்மா இந்த பிரச்சனைக்கு பதில் கூறியுள்ளார்.
ஜெகதீஷ் சர்மா தனது டுவிட்டரில் ராகுல்காந்தி உத்தரகாண்ட் மலைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஓய்வு எடுத்து வருவதாகவும்,அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டதாக வெளிவந்துள்ள தகவல்களை அடிப்படை ஆதாரமற்றது என்றும் கூறியுள்ள ஜெகதீஷ், உத்தரகாண்டில் ராகுல் இருப்பது போன்ற சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
ஒருமாத ஓய்விற்கு பின்னர் மீண்டும் ராகுல்காந்தி தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்கள் கூறுகின்றன.