வாக்களிக்க என்னென்ன ஆவணங்களை பயன்படுத்தலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம்.

voteவரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் மேலும் 11 வகையான ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.இன்று தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  என்னென்ன ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அவை வருமாறு:

1.பாஸ்போர்ட்,
2.ஓட்டுநர் உரிமம்,
3.வங்கி மற்றும் தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகம்,
4.பான் கார்ட்,
5.ஆதார் அட்டை
6.மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு,
7.கிராமப்புற வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை,
8.தொழிலாளர் நலத்துறையின் மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் கார்ட்,
9.அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள்,
10.புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
11. ரேஷன் கார்டு
மேற்கண்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் ஒரிஜினலை கொண்டுவந்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply