ஃபிக்செட் டெபாசிட்டை விட அதிக லாபம் தரும் அதே நேரத்தில் பாதுகாப்பான முதலீடு எது?
நம்முடைய முதலீடு ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்துக்கு முதலீடு செய்வதாக இருந்தால், லிக்விட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.சுமாராக 7% வட்டி கிடைக்கும் . இதன் சிறப்பு என்னவென்றால் நாம் பணத்தை எவ்வளவு காலம் டெபாசிட் செய்தாலும் அதற்கு ஏற்றவாறு 7% வட்டி கிடைக்கும். வங்கிகளில் மெச்சூரிட்டிக்கும் முன்னதாக பணம் எடுத்தால் அபராதம் கட்டுவதுபோல் இதில் இல்லை.
ஒரு வருட காலத்துக்கும் அதிகமாக முதலீடு செய்ய விரும்பினால், ஏஏஏ தரக்குறியீடு உள்ள கம்பெனி டெபாசிட்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்தால், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானம் கிடைத்தாலும் ரிஸ்க் அதிகம்.
மேலும் ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருக்கும்பட்சத்திலும், குறைந்தபட்சம் மூன்று வருட காலத்துக்கு முதலீடு செய்ய முடியும் என்றால், பணவீக்க விகித சரிகட்டலுக்குப் பிறகு(Indexation benefits) கூடுதலாக வரியை மிச்சப்படுத்த கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ரிஸ்க் குறைவாக இருக்கும்.
ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்ய முடியுமானால், நீண்ட கால அடிப்படையில் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.மற்ற எந்த முதலீட்டை யும் விட ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது அதிக வருமானம் கொடுக்கக் கூடியது. ஆனால், ரிஸ்க் கொஞ்சம் அதிகம். நம்முடைய தேவையை அறிந்து முதலீட்டை தேர்வு செய்ய வேண்டும்.