ஷங்கர் இயக்கிய ‘ஐ’ திரைப்படம் வெளியாகி ஐம்பது நாட்களை தாண்டிவிட்டாலும் அந்த படத்தின் தயாரிப்பாளர் முகத்தில் சிறிதும் சந்தோஷம் இல்லை. படத்தின் ஹை பட்ஜெட்டும், அதற்கு அவர் மூன்று வருடங்களாக கட்டிய வட்டியையும் கணக்கு பார்த்தால் அவருக்கு இன்னும் அசல் கூட தேறவில்லையாம்.
புதுமுகங்கள் இயக்கும் சிறிய பட்ஜெட் படங்களை எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரிய பட்ஜெட் படத்தை வருடக்கணக்கில் காத்திருந்து தயாரிப்பது வீண் வேலை என்பதை தற்போது பல தயாரிப்பாளர்கள் புரிந்துகொண்டனர்.
அதுவும் ஷங்கர் மாதிரி இயக்குனருக்கு தீனி போட எந்த தயாரிப்பாளரும் தற்போது தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கவுள்ளதாகவும், அதில் ரஜினி மற்றும் அமீர்கான் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தாலும், அந்த படத்தை தயாரிக்க இப்போதுவரை யாரும் முன்வரவில்லை.
எனவே ஐ படம் ரிலீஸாகி ஐம்பது நாட்களுக்கு மேல் ஆகியும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை இன்னும் ஷங்கர் வெளியிடாமல் உள்ளதாக கூறப்படுகிறது.