வெள்ளை மாளிகையின் கம்ப்யூட்டர்களை ஹேக்கிங் செய்ததா ரஷ்யா? திடுக்கிடும் தகவல்

white hosueஉலகிலேயே மிக அதிக பாதுகாப்புடன் இருக்கும் அமெரிக்க அதிபர் தங்கும் வெள்ளை மாளிகை கம்யூட்டர்களிலேயே ரஷ்ய ஹேக்கர்கள் ஊடுருவியதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் ஹேக்கர்களால் ஊடுருவப்பட்டதாக வெள்ளை மாளிகை அலுவலகம் சந்தேகம் கொண்டது. இந்த ஹேக்கர்கள் ரஷ்யாவில் இருந்து செயல்படுவதாக சந்தேகித்த அமெரிக்க புலனாய்வுத்துறை தற்போது மறைமுகமாக இந்த தகவலை வெளியிட்டு ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மார்க் ஸ்ரோ அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் “புதிய ஹேக்கர்களை கண்காணிப்பது சிறிது சவாலானதாக உள்ளது. இதற்கு காரணமானவர்கள் குறித்து தற்போது வெளிப்படையாக  தெரிவிக்க முடியாது. வெள்ளை மாளிகை கம்ப்யூட்டர்கள் இரு பிரிவுகள் கொண்டுள்ளன. ஒன்று, வகைப்படுத்தப்படாதவை. மற்றொன்று உயர்மட்ட ரகசிய கோப்புகள் கொண்டவை. எத்தகைய ஹேக்கர்களாக இருந்தாலும் எங்களது உயர்மட்ட ரகசிய கோப்புகளை ஊடுருவி திருட முடியாது என்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply