டுவிட்டரில் அமெரிக்க அதிபர் மாளிகை செய்த சாதனை

டுவிட்டரில் அமெரிக்க அதிபர் மாளிகை செய்த சாதனை

white houseசமூக இணையதளங்களில் ஃபேஸ்புக் இணையதளத்திற்கு அடுத்து இருக்கும் டுவிட்டர் இணையதளத்தில் அமெரிக்க அதிபர் மாளிகைக்கு என ஒரு அக்கவுண்ட் உள்ளது. இந்த பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது.

இந்த தகவல் அமெரிக்க அதிபர் மாளிகை டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: 1 கோடி விசிறிகளை அடைந்துள்ளோம். எங்களைப் பின் தொடரும் அனைவருக்கும் நன்றி” என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட அதிபர் மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், இதுவரை 24,500 பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிபர் மாளிகையின் டுவிட்டர் பக்கத்தை 1 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடரும் அதே வேளையில், அதிபர் ஒபாமாவின் தனிப்பட்ட டுவிட்டர் பக்கத்தை 7.34 கோடி விசிறிகள் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருடைய அதிகாரப்பூர்வப் பக்கத்தை 73.2 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Leave a Reply