அமெரிக்காவில் தொடரும் இனவெறி. சீக்கிய பெண்ணுக்கு ஓடும் ரயிலில் மிரட்டல்

அமெரிக்காவில் தொடரும் இனவெறி. சீக்கிய பெண்ணுக்கு ஓடும் ரயிலில் மிரட்டல்

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே வெளிநாட்டினர் குறிப்பாக இந்தியர்கள் வசிக்க முடியாத நாடாக அமெரிக்கா மாறி வருகிறது. சமீபத்தில் இனவெறி காரணமாக ஐதராபாத் பொறியாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளமுடியாத நிலையில் தற்போது சீக்கிய இளம்பெண் ஒருவர் இனவெறிக்கு ஆளாகியுள்ளார்

அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் வாழ்ந்து வரும் சீக்கிஅய பெண் ராஜ்ப்ரீத். இவர் தனது தோழியின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வதற்காக ராஜ்பிரீத் அங்குள்ள சுரங்க ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே ரயிலில் அவருக்கு அருகில் உட்கார்ந்திருந்த வெள்ளைக்காரர் ஒருவர், சீக்கிய பெண்ணை லெபனான் நாட்டை சேர்ந்தவர் என தவறாக கருதி அவரிடம் தனது இனவெறியை வெளிப்படுத்தியுள்ளார்.

அப்போது ராஜ்பிரீத் தன்னிடம் இருந்த செல்போனில் தீவிரமாக எதையோ பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட அந்த வெள்ளைக்காரர், “நீ வைத்திருக்கும் செல்போனில் அப்படி என்ன இருக்கிறது?… நீங்கள் இந்த நாட்டுக்கு என்ன செய்தீர்கள்?… உங்களைப் போன்றவர்களால்தான் நாடு சீரழிந்து விட்டது. மரியாதையாக இங்கிருந்து உனது லெபனான் நாட்டுக்கு ஓடிவிடு. இந்த நாட்டில் நீ இருக்கவே கூடாது” என்று ஆவேசத்துடன் மிரட்டி உள்ளார்.

அப்போது தனக்கும், லெபனானுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தான் இந்தியாவை சேர்ந்த சீக்கிய பெண் என்றும் முறையிட்டுள்ளார். ஆனால் அதை ஏற்காமல் வெள்ளைக்காரர் ராஜ்பிரீத்தை முறைத்து பார்த்துக் கொண்டே அடுத்த ரெயில் நிலையத்தில் இறங்கி சென்றுவிட்டார்.

இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ராஜ்ப்ரீத் கூறியுள்ளார்.

Leave a Reply