உக்ரைன் நாட்டில் பெண் தீவிரவாதி சமந்தா சுட்டுக்கொலை? பரபரப்பு தகவல்கள்.

ukraine samantha 1உலகின் பயங்கர பெண் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டிருந்த சமந்தா லெவ்த்வெயி என்பவர் உக்ரைன் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதை இந்த தகவலை உக்ரைன் அரசு உறுதிப்படுத்தவில்லை.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் ஓட்டல்கள் மற்றும் வணிக மையங்களை தகர்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் 30 வயது வெள்ளை விதவை என்று அழைக்கப்படும் சமந்தா லெவ்த்வெயிட். அதுமட்டுமின்றி கென்யாவின் தலைநகர் நைரோபியில், கடந்த 2013ஆம் ஆண்டு வெஸ்ட்கேட் என்ற வணிக வளாகத்தில் 67 பேர் கொன்று குவிக்கப்பட்டதற்கு இவரே காரணம் என்றும் நம்பப்படுகிறது.  அல் ஷகாப் என்ற தீவிரவாதிகளின் இயக்கத்தின் தளபதியாகவும் விளங்கியவர் இவர் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பின்னர்தான் சமந்தாவை உலகின் அதிபயங்கர பெண் தீவிரவாதியாக சர்வதேச போலீஸ் அறிவித்து அவரை உலகம் முழுவதும் தேடி வந்தது.

மேலும் சமந்தாவின் கணவர் ஜெர்மைன் லிண்ட்சே என்பவர் லண்டனில் கடந்த 2005ஆம் ஆண்டு சுரங்க ரயில்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைப் படை தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ukrain samantha

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உக்ரைனில் நடந்த சண்டையில் ரஷ்ய வீரர் ஒருவரால் இவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த செய்தியை உக்ரைன் அரசு உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் சமந்தாவை சுட்டுக்கொன்ற ரஷிய வீரரின் தலைக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என உக்ரைன் சிறப்பு பணிகள் பிரிவு அறிவித்துள்ளதால் சமந்தா சுட்டுக்கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

சமந்தா சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி இங்கிலாந்தில் உள்ள அவரது தந்தையும், முன்னாள் படை வீரருமான ஆண்ட்ரூ லெவ்த்வெயிட்டிடம் கேட்டபோது, ”நான் எதையும் கேள்விப்படவில்லை. யாரும் என்னிடம் எதையும் சொல்லவில்லை. நானும் எதையும் கூறப்போவதில்லை” என்றார். சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் சமந்தாவுக்கு 4 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply