மது தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்குமா?
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மதுவுக்கு எதிரான போராட்டங்கள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் அதிமுக, திமுக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு போராடி வருகின்றன. திமுக தலைமை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்குக்கு தேவையான நடவடிக்கை’ எடுப்போம் என்று உறுதி கூறியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மது தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் குறித்து தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் மொத்தம் 15 நிறுவனங்கள் மது தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் தினமும் ஒரு லட்சம் பெட்டிகள் முதல் 8 லட்சம் பெட்டிகள் வரை மதுவை உற்பத்தி செய்து விநியோகம் செய்து வருகிறது. இந்த 15 நிறுவனங்களில் 13 நிறுவனங்கள் திமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கு அல்லது அவர்களின் பினாமிகளுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் எந்த எந்த நிறுவனங்கள் மது உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அதன் உரிமையாளர்கள் யார்? யார்? என்று பார்ப்போம்.
பீர் வகைகள்…
சென்னை புருவரீஸ்-பெங்களூரு தொழிலதிபர்.
மோகன் புருவரீஸ் – மருத்துவக் கல்லுரி உரிமையாளர்.
எம்.பி புருவரீஸ்- எம்.பி புருஷோத்தமன்.
கல்ஸ்- தி.மு.க. வாரிசுகள்.
அப்பல்லோ- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.
ஏ.எம். புருவரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது.
மதுவகைகள்…
யுனைடெட் ஸ்பிரிட்ஸ்- பெங்களூரு பிரபல தொழிலதிபர்.
மோகன் புருவரீஸ்- மறைந்த முதல்வருக்கும் நெருக்கமான தொழிலதிபர்.
சிவா டிஸ்டில்லரீஸ்-மறைந்த பொள்ளாச்சி தொழிலதிபர் குழுமத்துக்கு சொந்தமானது.
எம்.பி டிஸ்டில்லரீஸ்- எம்.பி. புருஷோத்தமன்.
சபில் – பொழுது போக்கு பூங்கா உரிமையளருக்கு சொந்தமானது.
மிடாஸ்- அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவருக்கு சொந்தமானது.
எலைட் டிஸ்டில்லரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சருக்கு சொந்தமானது.
எஸ்.என்.ஜே- கருணாநிதிக்கு நெருக்கமான சினிமா தயாரிப்பாளருக்கு சொந்தமானது.
கல்ஸ் – திமுக வாரிசுகளுக்கு சொந்தமானது.
கோல்டன் வாட்ஸ்-தஞ்சை தி.மு.க. அரசியல் தலைவருக்கு சொந்தமானது.
இம்பீரியல் ஸ்பிரிட்ஸ்- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.
தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்துவதிலேயே குறியாக இருக்கின்றது. மேற்ண்ட மது தொழிற்சாலைகளியும் மூட வேண்டும் என எந்த கட்சிகளாவது குரல் கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.