எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு அனுமதி அளித்தது யார்? இந்திய மருத்துவ கழகத் தலைவர் தகவல்
சமீபத்தில் மூன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட அங்கீக்காரம் அளித்தது யார்? என தமிழக் அரசியல்ல் கட்சிகளிடையே அறிக்கை போர் நடந்து வரும் நிலையில் எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு இந்திய மருத்துவ கழகத் தலைவர் வனிதா முரளிகுமார் மத்திய அரசு அங்கீகாரம் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து முரளி குமார் அளித்துள்ள பேட்டியில கூறியதாவது:
” மத்திய இந்திய மருத்துவ கழகம் இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது. இந்தியாவில் மத்திய இந்திய மருத்துவ கழக அங்கீகாரம் பெற்று 350 ஆயுர்வேத கல்லூரிகளும், 10 சித்தா கல்லூரிகளும், 43 யுனானி கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் அரசு சித்த மருத்துவ கல்லூரிகள் உட்பட 9 கல்லூரிகள் இயங்கி வருகிறது.
மாணவிகள் இறந்த சம்பவத்தில் மத்திய இந்திய மருத்துவ கழகம் அந்த கல்லூரிக்கு அங்கீகாரம் அளித்ததாக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. மத்திய இந்திய மருத்துவ கழகம் யோகா இயற்கை மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதில்லை. எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை வைத்திய மருத்துவ கல்லூரிக்கு மத்திய இந்திய மருத்துவ கழகம் எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை.
யோகா மற்றும் இயற்கை வைத்திய மருத்துவத்திற்காக கவுன்சில் இதுவரை தொடங்கபடவில்லை. இதற்காக டாஸ்போஸ் என்ற அமைப்பை ஏற்படுத்தி டாக்டர் எச்.ஆர்.நாகேந்திரா தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர்.
இந்தியாவில் 18 யோகா இயற்கை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 2 ஆயிரம் பேர் யோகா இயற்கை மருத்துவர்களாக உள்ளனர்.
இதை ஒழுங்குபடுத்த யோகா இயற்கை மருத்துவ கல்லூரிகளுக்கு தனியாக கவுன்சில் அமைப்பது அல்லது மத்திய போர்டு உருவாக்குவது என கடந்த ஆண்டு செப்டம்பரில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.