விஜயகாந்தின் தனித்து போட்டி முடிவால் யாருக்கு பாதிப்பு?

விஜயகாந்தின் தனித்து போட்டி முடிவால் யாருக்கு பாதிப்பு?
vijayakanth
பிரபல தமிழ் அரசியல் இதழான ஜூனியர் விகடன், விஜயகாந்தின் தனித்து போட்டியின் முடிவால் யாருக்கு பாதிப்பு என்ற கருத்துக்கணிப்பு ஒன்றினை எடுத்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் தனித்த போட்டி என்ற முடிவை வரவேற்பதாக 36.37% பேர் வாக்களித்துள்ளனர். மேலும் இந்த முடிவு காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவு என 16.5% பேர் வாக்களித்துள்ளனர்.

விஜயகாந்தின் இந்த முடிவால் திமுகவுக்குத்தான் பாதிப்பு என 41.95% வாக்களித்துள்ளனர். அதிமுகவுக்கு பாதிப்பு என 21.57% பேர்களும், மக்கள் நலக்கூட்டணிக்கு பாதிப்பு என 21.72% பேர்களும், வாக்களித்துள்ளனர்.

மேலும் தனித்து போட்டியிட்டாலும் விஜயகாந்த் முதல்வர் ஆவதை விரும்பவில்லை என 41.02% பேர் வாக்களித்துள்ளனர். அதேபோல் விஜய்காந்த் எதிர்க்கட்சி தலைவர் செயல்பாடு சரியில்லை என 28.76% பேர் வாக்களித்துள்ளனர்.

Chennai Today News: Who is affected by the decision of the competition Vijayakanth alone?

Leave a Reply