ஹன்சிகா-நித்யாமேனன் யார் அழகி? அரசியல்வாதி முன் நடந்த விவாதம்

ஹன்சிகா-நித்யாமேனன் யார் அழகி? அரசியல்வாதி முன் நடந்த விவாதம்

hansikaகமல், ரஜினி, விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஜெயப்ரதா. இவரது மகன் சித்து, கதாநாயகான அறிமுகமாகும் திரைப்படம் ‘உயிரே உயிரே’. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் ‘உயிரே உயிரே’ படத்திற்கு அனைத்து பாடல்களையும் எழுதிய பாடலாசிரியர் விவேகா, “இந்த படத்தின் இயக்குனர் ராஜசேகர் என் நண்பர். படத்தின் எல்லா பாடல்களையும் நான் தான் எழுதியிருக்கிறேன். இந்த படத்தில் கதாநாயகியின் அழகை வர்ணித்து ஒரு பாடல் எழுதும்படி இயக்குனர் ராஜசேகர் கேட்டுக்கொண்டார். நானும் பல்லவியை எழுதி காட்டினேன். அப்போது அவர், ‘உங்களை நித்யாமேனனுக்கு பாடல் எழுத சொல்லவில்லை. அழகான ஹன்சிகாவுக்கு தான் பாடல் எழுத சொன்னேன்’ என்று கூறினார். அதைத்தொடர்ந்து, ‘‘இவள் தான் அழகி… உலகத்தின் மலர்களுக்கு இவள் தான் தலைவி’’ என்று அந்த பாடலை எழுதினேன்.

இவ்வாறு கவிஞர் விவேகா பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென மேடையில் உட்கார்ந்திருந்த நடிகை ஸ்ரீப்ரியா எழுந்து, ‘‘நித்யாமேனன் அழகி இல்லை என்று யார் சொன்னது? ஹன்சிகா அழகுதான். அதற்காக நித்யாமேனனை அழகு இல்லை என்று சொல்லாதீர்கள். நித்யாமேனன் ரொம்ப அழகு. நன்றாக நடிக்க தெரிந்தவர்” என்று பேசியதால் விழா மேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் ப்ரிஅபல அரசியல் பிரமுகர் அமர்சிங் உள்பட அனில்கபூர், மோகன்பாபு, சித்து என பல இருந்தனர். மேலும் இந்த விழாவில் நடிகர்கள் நரேன், ஜெகன், நடிகைகள் ராதிகா சரத்குமார், சுமலதா, சாயாசிங், ரோகிணி, உமா பத்மநாபன், மீரா கிருஷ்ணன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

Leave a Reply