அமெரிக்க அதிபர் தேர்தலில் அடுத்ததாக ஒரு பெண் வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது என ஒபாமா மனைவி தன்னுடைய அதிபர் ஆசையை மறைமுகமாக தெரிவித்துள்ளார். இதனால் ஹிலாரி கிளிண்டனின் ஆசையில் இடி விழுந்துள்ளது.
அடுத்த அமெரிக்க அதிபராக ஹிலாரி கிளிண்டன் தான் வருவார் என அமெரிக்கா முழுவதும் பரவலான கருத்து இருந்து வரும் நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா மனைவி மிச்சேல் ஒபாமா, “”நாட்டின் மிக உயரிய பொறுப்புக்கு பெண் ஒருவர் நியமனமாக வேண்டிய தருணம் வந்துவிட்டது. யாராக இருந்தாலும், போட்டியிடுபவர் திறமை வாய்ந்தவர்களாக இருந்தால், அவரை மக்கள் ஏற்கத் தயாராக உள்ளனர். நிறம், இனம், பொருளாதார நிலை என திறமைக் கொண்டவர்களிடம், மக்கள் எந்த பாகுபாட்டையும் பார்க்கமாட்டார்கள். அப்படிப்பட்ட திறமை வாய்ந்த ஒரு பெண், அதிபராக தேர்வாக வாய்ப்பு உள்ளது. அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இவர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு தெரிவிக்கின்றாரா அல்லது தன்னுடைய அதிபர் ஆசையை வெளிப்படுத்துகிறாரா? என்பது புரியாமல் குழம்பிய நிலையில் ஒரு நிருபர் தைரியமாக. “நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு சாத்தியம் உண்டா? என்ற கேட்ட கேள்விக்கு பதிலளித்த மிச்சேல், “கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருவேன். அதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றது” என்றார்.
இதனால் அடுத்த அமெரிக்க அதிபர் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அந்த பெண் ஹிலாரி கிளிண்டனா? அல்லது மிச்சேல் ஒபாமா? என்ற கருத்து தற்போது அமெரிக்கா முழுவதும் எழுந்து வருகிறது.