அடுத்த அமெரிக்க அதிபர் யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள்

அடுத்த அமெரிக்க அதிபர் யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள்

donaldஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளதை அடுத்து வரும் நவம்பர் மாதம் 8ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பும் நேருக்கு நேர் மோதுகின்றனர். இரு தரப்பிலும் சூறாவளி பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில் அடுத்த அமெரிக்க அதிபர் யார்? என்ற கருத்துக்கணிப்பு தற்போது அமெரிக்க ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

அமெரிக்காவின் பிரபல ஊடகமான ‘ரியூட்டர்ஸ்’ நடத்திய ஆன்லைன் கருத்து கணிப்பில் ஆயிரத்துக்கும் அதிகமான மாதிரி வாக்காளர்கள் பங்கேற்று தங்களது மனதுக்கு பிடித்த அதிபர் பதவிக்கான வேட்பாளருக்கு வாக்களித்தனர்.

இதில், குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்-ஐவிட ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு 6 சதவீதம்பேர் அதிகமான ஆதரவு அளித்துள்ளனர். அதிபர் தேர்தலுக்கு இன்னும் சுமார் 100 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஹிலாரியின் பிரசார வியூகத்தால் ஆதரவு சதவீதம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அமெரிக்காவின் அடுத்த அதிபராக முதல்முறையாக ஒரு பெண் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply