திமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? ஸ்டாலின் கூறிய பதில் என்ன?

திமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? ஸ்டாலின் கூறிய பதில் என்ன?

karuna and stalinகடந்த சனிக்கிழமை லயோலா கல்லூரி மாணவர்கள் எடுத்த தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியானது. எந்த ஒரு கருத்து கணிப்பு வெளிவந்தாலும், அந்த கருத்துக்கணிப்புக்கு ஆதரவாக ஒரு கூட்டமும், எதிர்ப்பாக ஒரு கூட்டமும் விமர்சனம் செய்யும். ஆனால் இந்த கருத்துக்கணிப்பை ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் காட்டமாக விமர்சனம் செய்து வருகின்றன. இதுகுறித்து தொலைக்காட்சிகளிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தேர்தல் கருத்து கணிப்பை நம்பி நாங்கள் அரசியல் நடத்தவில்லை என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பெங்களூரு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ”சட்டமன்றம் ஜெயலலிதாவுக்கு புகழ் பாடி, அர்ச்சனை செய்யும் இடமாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 110 விதியின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு தீர்மானங்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

அந்த திட்டப்பணி, சூழ்நிலை குறித்தும் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வலியுறுத்தினோம். இதே கோரிக்கையை அனைத்து கட்சிகளும் பலமுறை வலியுறுத்தியும் அ.தி.மு.க. அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே, இதெல்லாம் மக்களை திசை திருப்புகின்ற செயல்.

தேர்தல் கருத்து கணிப்பை நம்பி தி.மு.க. அரசியல் செய்யவில்லை. தேர்தலுக்கு முன்வரும் கருத்து கணிப்பு பாதகமாகவும். சாதகமாகவும் அமையும்” என்றார். அப்போது, தி.மு.க. முதல்வர் வேட்பாளர் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ”உங்கள் யூகங்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை” என்று கூறிவிட்டு சென்றார்.

Leave a Reply