ஸ்ரீரங்கம் தொகுதியில் காங்கிரஸ்-பாஜக வேட்பாளர் யார்? நீடிக்கும் குழப்பம்

cong vs bjpஅதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் சில கட்சிகள் வேட்பாளரை கூட அறிவிக்க முடியாத நிலையில் உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எந்த கட்சி போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்தை நடத்த இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். ஆனால் இந்த சந்திப்பில் எவ்வித உடன்பாடும் ஏற்பட்டவில்லை என்றும் இழுபறி நிலையே நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாமக மற்றும் மதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துவிட்டது.

காங்கிரஸ் கட்சி சார்பில் குஷ்பு போட்டியிடுவார் என செய்திகள் தெரிவித்தாலும், அந்த கட்சி தேர்தலை சந்திக்குமா? என்பதே சந்தேகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் திமுகவை ஆதரிக்க தயார் என்று அறிவித்துள்ளதால் அங்கும் குழப்பநிலையே நீடித்து வருகிறது.

இம்மாதம் 27ஆம் தேதி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என்பதால் அதற்குள் அரசியல் கட்சிகள் ஒருமித்த முடிவை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply