விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் ‘சகாப்தம்’ படத்தின் பூஜை டிசம்பர் 12ஆம் தேதி அவரது வீட்டில் பிரமாண்டமாக நடந்தது. இந்த படத்தை இயக்குனர் சந்தோஷ்குமார் இயக்குகிறார்.
தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி, இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் கெளரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. விருதகிரி படத்திற்கு பிறகு அரசியல் பணி காரணமாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த விஜயகாந்த், மகனுக்காக மீண்டும் களம் இறங்குகிறார். பாராளுமன்ற தேர்தலில் கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது, பிரச்சாரம் செய்வது போன்ற பணிகள் இருப்பதால் விஜயகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் முதலில் எடுக்கப்படும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை தேர்ந்தெடுப்பதில் இயக்குனருக்கும் விஜயகாந்திற்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. புதுமுக நடிகையை தேர்ந்தெடுக்குமாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஆனால் இயக்குனர் பிரபலமான ஒரு ஹீரோயினியை தேர்ந்தெடுக்கலாம் என கருத்து கூறி வருகிறாராம். இந்நிலையில் ஹீரோயின் தேர்வுக்கான ஆடிஷன் அடுத்த வாரம் சென்னையில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்தில் நடக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.