அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று(ஞாயிறு) நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வர் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றதால் முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் இழந்தார். இதனால் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்காக இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வர் யார் என்பதை அனைத்து எம்.எல்.ஏக்களும் ஆலோசித்து முடிவு செய்வார்கள்.