இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்? இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் திடீர் விலகல்
சமீபத்தில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என்று அந்நாட்டின் பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளதால் விரக்தி ஏற்பட்ட பிரதமர் டேவிட் கேமரூன் பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அக்டோபர் மாதம் கேமரூன் பதவி விலகவுள்ளதால் 3 மாதத்திற்குள் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் இப்போதே தொடங்கி விட்டன.
இதனிடையே பிரதமர் பதவிக்கு லண்டன் முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சன் போட்டியிட போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்துள்ளார். ஆனால் தற்போது அவர் பிரதமர் போட்டியில் இருந்து திடீரென விலகியுள்ளார். இவர்தான் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலக வேண்டும் தீவிரமாக பிரச்சாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1980-ம் ஆண்டுகளில் பத்திரிகையாளராக இருத போரீஸ் ஜான்சன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட இவரது மனைவி பெயர் டிப்சிங். கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த இவர் இங்கிலாந்து பாராளுமன்றத்தின் முதல் இந்து எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகிய நிலையில் பிரதமர் பதவிக்கு கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பெண் மந்திரி தெரசாமே போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இவர் தற்போது உள்துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிரதமர் டேவிட் கேமரூனின் தீவிர ஆதரவாளர் ஆவார். தற்போது நாடு இருக்கும் சூழ்நிலையில் வலிமையான தலைமை தேவை மற்றும் ஐரோப்பிய யூனியன் விவகாரத்தில் பிளவு பட்டிருக்கும் கட்சியை ஒற்றுமைபடுத்தவும் இவர் தகுதியானவர் என கருதி பிரதமர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.