இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர் யார்? புதிய தகவல்

இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர் யார்? புதிய தகவல்

Arvind Panagariyaஇந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்கும் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்தப் பதவியை ஏற்கும் அடுத்த நபர் யார்? என்ற கேள்வி இந்தியார்கள் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியில் தற்போது துணை ஆளுநர்களாக பதவி வகிக்கும் சுபிர் கோகார்ன், ராகேஷ் மோகன், பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த் தாஸ் ஆகியோரில் யாரையாவது ஒருவரை மத்திய அரசு நியமிக்கலாம் என்று தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளியாகி வந்தன. ஆனால் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக மத்திய கொள்கைக் குழுவின் (நீத்தி ஆயோக்) துணைத் தலைவர் பனாகரியா நியமிக்கப்படலாம் எனச் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி ஒன்றில் “ஜூலை 18-ஆம் தேதிக்கு முன்னதாக, இதுதொடர்பான முடிவை பிரதமர் அலுவலகம் எடுக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply