மியான்மரின் அடுத்த அதிபர் யார்? ஆங் சான் சூகி அதிபரவாதில் சிக்கல்?
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆங் சான் சூகியின் ஜனநாய தேசிய லீக் கட்சி பெறும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை பிடித்திருந்தாலும் ஆன் சான் சூகி அதிபராவதில் சிக்கல் எழுந்துள்ளது.
மியான்மர் நாட்டின் சட்டப்படி ஒருவரின் குழந்தைகள் வெளிநாட்டுக் குடிமக்களாக இருந்தால், அவர் அதிபராகப் பதவியேற்க முடியாது. ஆனால் ஆங் சான் சூகியின் இரண்டு மகன்கள் இங்கிலாந்து நாட்டின் குடிமக்களாக இருப்பதால் அவர் அதிபர் பதவிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டை வழிநடத்தும் முக்கிய இடத்தில் ஆங் சாங் சாகி இருப்பார் என்றும், அல்லது அரசியல் அமைப்பு சட்டம் திருத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஆங் சான் சூகியின் ஜனநாய தேசிய லீக் கட்சி புதிய ஆட்சியை அமைத்தாலும், மொத்தமுள்ள 664 உறுப்பினர்களில் 25 சதவிகிதம் பேரை ராணுவம் நியமனம் செய்யும் என தெரிகிறது. என ஆட்சியில் ராணுவத்தின் தலையீடு நீடிக்கும் என்றே கருதப்படுகிறது.
அடுத்த மியான்மர் அதிபராக யாரை ஆங் சான் சூகி தேர்வு செய்வார் என்பதை தெரிந்து கொள்ள உலகமே எதிர்நோக்கி காத்திருக்கின்றது.
English Summary: Myanmar’s opposition leader and democracy campaigner Aung San Suu Kyi has acknowledged she will be unable to become her country’s next president after elections later this year, a decision that will disappoint millions of her supporters.
[carousel ids=”75541,75457,75456,75451,75448,75194″]