யார் முதல்வர்? என்ன முடிவெடுப்பார் ஆளுனர்?
130 எம்எல்ஏ-க்கள் தனக்கு ஆதரவு இருப்பதாகசசிகலாவை ஒருபக்கம் கூறி வரும் நிலையில் இன்னொரு பக்கம் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனக்கு உரிய நேரத்தில் எம்எல்ஏ-க்கள் ஆதரவளிப்பார்கள் என்று கூறி வருவதால் ஆளுனர் இப்போது என்ன முடிவெடுப்பார் என்பதை நாடே எதிர்நோக்கி காத்திருக்கின்றது.
ஓபிஎஸ் அவர்களின் ராஜினாமா கடிதத்தை ஆளுனர் ஏற்றுக்கொண்டால் அடுத்த வாய்ப்பு சசிகலாவுக்குத்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர இருப்பதால், தீர்ப்புக்கு பின்னர் சசிகலாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைக்க்க ஆளுநர் முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது என அதிகாரபூர்வமற்ற தகவலை ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா பெறப்பட்டதாக முதலமைச்சர் ஓபிஎஸ் கூறிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு ஆளுனர் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தையும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவையும் சட்டப்பேரவையை கூட்டி தங்களது, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கூறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.