பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார்? அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்பு?

05IN_DELHI_1074518gநாடாளுமன்றத்தில் பத்து ஆண்டுகாலமாக தொடர்ச்சியாக ஆட்சி செய்துவந்த காங்கிரஸ் கட்சி, தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத அளவுக்கு படுமோசமான தோல்வியை பெற்றுள்ளது.

நாடு சுதந்திரம் ஆனதில் இருந்து இதுமாதிரியான மோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சி இதுவரை அடைந்ததில்லை. காங்கிரஸை குழிதோண்டு புதைத்துவிட்ட ராகுல்காந்தி, எதிர்க்கட்சி தலைவராக கூட இருக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 10 சதவிகித வெற்றியை பெற்ற கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படும். எனவே எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காங்கிரஸ் கட்சிகு 55 தொகுதிகள் தேவை. ஆனால் தற்போது 50க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற காங்கிரஸுக்கு தகுதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸை அடுத்து மாபெரும் கட்சியாக உருவெடுத்துள்ள அதிமுக மற்றும் திரிணாமுல் கட்சிகள் இணைந்தால் எதிர்க்கட்சி தலைவர் ஒருவரை தேர்தெடுக்க முடியும்.

Leave a Reply