மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டாக கைப்பற்ற ஜெயலலிதா-மம்தா திட்டம்.

05IN_DELHI_1074518gநாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திரமோடி முறைப்படி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுபோலவே மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை இனிதான் முடிவு செய்ய வேண்டும்.

மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக இருக்க ஒரு கட்சிக்கு மொத்த இடத்தின் 10 சதவிகித தொகுதிகள் கைவசம் வைத்திருந்க்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சி 50க்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் எதிர்க்கட்சியாக இருக்க தகுதி இல்லாமல் உள்ளது. இந்நிலையில் 37 இடங்களை பிடித்துள்ள அதிமுகவும், 33 தொகுதிகளை கைப்பற்றியுள்ள திரிணாமுல் காங்கிரஸும் இணைந்தால் மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜெயலலிதா பிரதமர் ஆவதற்கு முதன்முதலில் ஆதரவு கொடுத்தவர் மம்தா பானர்ஜி. எனவே எதிர்க்கட்சி தலைவர் பதவியை அதிமுகவுக்கு பெற்றுத்தர  மம்தாவுக்கு எவ்வித தயக்கமும் இருக்க வாய்ப்பில்லை. அதுபோலவே எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியும் தரப்படுவதும் மரபு. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் துணை சபாநாயகர் பதவி ஆகிய இரண்டு பதவிகளையும் அதிமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் பகிர்ந்து கொள்ள தற்போதே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

அதிமுகவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியும், மம்தா பானர்ஜிக்கு துணை சபாநாயகர் பதவியும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply