நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு? வெங்கையா நாயுடு பேட்டி

vengaiya-naiduநாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க முடியாத என்பதை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று சூசகமாக கூறியுள்ளார்.

நேற்று பெங்களூரில் பேட்டியளித்த வெங்கைய நாயுடு, “எதிர்க்கட்சி பதவி தங்களுக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் காங்கிரஸ் கட்சி முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சி தலைவர்களே இல்லாமல் ஆட்சி செய்தது குறித்து குறிப்பிட மறுப்பது ஏன் என்று தெரியவில்லை. அன்று பாராளுமன்றத்தில் 31 உறுப்பினர்களை கொண்ட தெலுங்குதேசம் கட்சிக்கு எதிர்க்கட்சி அங்கீகாரம் வழங்க மறுத்த காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் குறித்து பேசுவதற்கு யோக்கியதை இல்லை என்று கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குவது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காது. இது முழுக்க முழுக்க சபாநாயகர் எடுக்கும் முடிவு. இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் சாயம் பூசுவது துரதிர்ஷ்டவசமானது. அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விரும்புகிறது. இவ்வாறு வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

Leave a Reply