‘தல 57’ படத்தில் அஜித் வில்லன் யார்? புதிய தகவல்
தல அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கும் நடிகரை தவிர கிட்டத்தட்ட அனைவரும் உறுதி செய்யப்பட்டுவிட்டனர். வில்லன் கேரக்டரில் நடிப்பது யார் என்பது குறித்த சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் FBI அதிகாரியாக நடிக்கும் அஜித்தே, வில்லன் கேரக்டரிலும் நடிக்கவுள்ளதாகவும் இந்த கேரக்டரின் கெட்டப் ‘மங்காத்தா’ ஸ்டைலில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் இருக்கும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது. இந்த தகவவலை விரைவில் படக்குழுவினர் உறுதிப்படுத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித், காஜல் அகர்வால், கருணாகரன், தம்பிராமையா, மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சிறுத்தை சிவா இயக்கவுள்ள இந்த படம் 2017ஆம் ஆண்டு தம்ழிப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.