2ஆம் உலகப் போருக்குப் பின்னர் பதவியேற்ற அமெரிக்க அதிபர்களில் மிகவும் மோசமானவர் ஒபாமாதான் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளதால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2ஆம் உலகப்போருக்கு பின்னர் பதவியேற்றஅமெரிக்க அதிபர்களிலேயே மிகவும் மோசமானவர் யார்? என்பது குறித்து அமெரிக்க மக்களிடையே தனியார் நிறுவனம் ஒன்று ஒரு கருத்துக் கணிப்பை எடுத்தது. இதில், இதுவரை அமெரிக்க அதிபர்களாக பதவியேற்றவர்களில் ஒபாமாதான் மிக மோசமான அதிபர் என்று 33% பேர் கருத்து கூறிய்ள்ளனர். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளவர் முன்னாள் அதிபர் ஜார்ஷ் புஷ். அவருக்கு 28% பேர் வாக்களித்துள்ளனர். இவர் ஒபாமாவுக்கு முன்னர் அமெரிக்க அதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2012ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியை ஒபாமாவுக்கு பதில் மிட் ரோம்னி அதிபராக வெற்றி பெற்றிருந்தால் மிகவும் நன்மையாக இருந்திருக்கும் என்று 45% பேர்களும், அப்படி ஒருவேளை நடந்திருந்தால் அமெரிக்காவின் நிலை மேலும் மோசமாகியிருக்கும் என்று 38% பேர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒபாமா அரசு திறமையாக செயல்படவில்லை என்று 54% பேர்களும், அர்சு நிர்வாகத்தின் மீது ஒபாமா போதுமான கவனம் செலுத்தவில்லை என்று 48% பேர்களும் கருத்து கூறியுள்ளனர்.
மேலும் 2ஆம் உலகப் போருக்குப் பிறகு சிறந்த அதிபராக இருந்தவர் ரொனால்டு ரீகன் என்று 3% பேர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவரைத் தொடர்ந்து பில் கிளிண்டன் (18 சதவீதம்), ஜான் எஃப்.கென்னடி (15 சதவீதம்), ஆகியோர் சிறந்த அதிபர்களாக இருந்தவர்கள் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. கருத்து கூறப்பட்டுள்ளது.