நேற்று மகாத்மா காந்தியின் பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் முன்னாள் பீகார் மாநில முதல்வர் காந்தியை கொலை செய்தது பிரதமர் நரேந்திர மோடிதான் என்று பொருள்படும் ஒரு டுவீட்டை போட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியை படுகொலை செய்தது யார் என்ற கேள்வியை கேட்டு அதற்கு தனக்கே உரிய குசும்புத்தனமான பதிலையும் அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். அந்த பதிலில் “கோட்சேவை வழிபடுவது யார்? ஆர்.எஸ்.எஸ்.; ஆர்.எஸ்.எஸ். சொல்வது போல் நடப்பது யார்? பா.ஜ.க.; பா.ஜ.க.வை இயக்குவது யார்? மோடி; அப்படியானால், காந்தியை கொன்ற கொலையாளி யார்…? என்று அவர் எழுப்பி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக சாடும் லாலுவின் இந்த ட்விட்டுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பீகாரில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் லாலுவின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்து என்பது குறிப்பிடத்தக்கது.