நேதாஜியை கொலை செய்தது ஸ்டாலின்? சுப்பிரமணியன் சுவாமி கூறும் திடுக்கிடும் தகவல்

nethajiஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால் நான் மேல்முறையீடு செய்வேன் என பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த சுப்பிரமணியன் சுவாமி தற்போது மத்திய அரசு மீதும் வழக்கு போடுவேன் என மிரட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த தகவல்களை ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் மத்திய அரசு வெளியிடாவிடாவிட்டால் மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று சுப்பிரமணியன் சுவாமி மதுரையில் அளித்த பேட்டி ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.

விராத் இந்துஸ்தான் சங்கம் சார்பில் மதுரையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

”நேதாஜிக்காக ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். ஆனால், நேதாஜி எங்கே போனார்? சீனாவில் உள்ள மஞ்சூரியன் என்ற இடத்துக்கு போனார். அப்போது அந்த இடம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஸ்டாலினை நம்பி அங்கு சென்றார். ஆனால், அந்த சமயத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த நேரு, இங்கிலாந்து பிரதமருக்கு எழுதிய கடித்ததில், நேதாஜியை போர் குற்றவாளி என அறிவித்தீர்களே. எனவே அதன்படி, ரஷ்ய அதிபர் ஸ்டாலினிடம் பேசி, நேதாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி இங்கிலாந்து பிரதமர் கூறியதால், நேதாஜியை ஸ்டாலின் கொலை செய்தார். இதுதான் உண்மை. இவை அனைத்தும் ஆவணங்களில் உள்ளன. நேதாஜி இந்தியா திரும்பாததற்கு நேருவே காரணம். நேதாஜி பற்றிய தகவல்களை வெளியிட்டால் காங்கிரஸ் கட்சியினர் வெளியில் நடமாட முடியாது.

நான் 1991-ல் மத்திய அமைச்சராக இருந்தபோது, நேதாஜி குறித்த ஆவணங்களை பார்த்தபோது, இந்த விவரங்கள் எனக்குத் தெரியவந்தது. இந்த உண்மைகளை வெளிப்படுத்த வேண்டுமென்று அன்றுமுதல் நான் சொல்லி வருகிறேன். ஆனால், அதற்கு சாதகமான ஆட்சி வரவில்லை. இப்போது பாஜக ஆட்சி வந்துள்ளது. இந்த உண்மையை வெளியே தெரிவித்தால் காங்கிரஸ்காரர்கள் நடமாட முடியாதே. சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமே என பிரதமர் மோடிக்கு இதில் சிறிது கவலை உண்டு. அதனால் சிறிதுகாலம் காத்திருந்தோம். வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் இந்த ஆவணங்களை எல்லாம் வெளியே கொண்டுவராவிட்டால் நான் உச்ச நீதிமன்றம் சென்று, ஆவணங்களை வெளியே எடுக்க உத்தரவு பெறுவேன்” என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

Leave a Reply