கேரளம், மேற்குவங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்?

கேரளம், மேற்குவங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்?
west bengal
தமிழகத்தை போலவே மேற்குவங்காளம், அஸ்ஸாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என பெருவாரியான ஊடகங்களும் திமுக ஆட்சியை பிடிக்கும் என ஒருசில ஊடகங்களும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்ட நிலையில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களின் கருத்துக்கணிப்புகளை தற்போது பார்ப்போம்.

மேற்குவங்கத்தை பொறுத்தவரையில் மீண்டும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என பெருவாரியான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இடது சாரி கட்சிகளுக்கு இம்முறையும் தோல்வி ஏற்படும் என தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன

மேலும் அஸ்ஸாம் மாநிலத்தில் முதல்முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அதேபோல் புதுச்சேரியில் ரெங்கசாமி மீண்டும் ஆட்சி அமைப்பார் என தெரிகிறது

Leave a Reply