கடந்த சில நாட்களாக ‘தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார்’ பட்டத்திற்கான வாக்கெடுப்பை பிரபல பாலிவுட் இணையதளம் ஒன்று நடத்தி வந்தது. இதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் தல அஜீத்துக்கு 51.27% வாக்குகளும், தளபதி விஜய்க்கு 39.69% வாக்குகளும் கிடைத்துள்ளது. இதன்படி தென்னிந்திய அல்டிமேட் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அஜீத் வென்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
முதலில் விஜய்க்கும் அஜீத்துக்கும் இடையே குறைந்த அளவு வித்தியாசமே இருந்தது. ஆனால் போகப்போக விஜய்க்கு வாக்குகள் பதிவாகும் சதவீதம் குறைந்து கொண்டே வந்ததோடு ஒரு கட்டத்தில் நின்றுவிட்டது. ஆனால் தல அஜீத்துக்கு கடைசி நாள் வரை வாக்குகள் கூடிக்கொண்டே இருந்ததாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
அஜீத்துக்கு கிடைத்த இந்த பட்டம், தேசிய விருது கிடைத்ததற்கு சமமாக அவரது ரசிகர்கள் கருதி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அஜீத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு வருகிறது.
வரும் 1ஆம் தேதி அஜீத் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வழங்கிய பிறந்த நாள் பரிசாகவே இந்த விருது கருதப்படுகிறது. அஜித்துக்கு கிடைத்த இந்த விருதை விஜய் குறுக்கு வழியில் தட்டி பறிக்க கடைசி வரை முயன்றதாகவும், ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை என்றும் ஒரு வதந்தி பரவி வந்ததாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.