பெரிய நடிகர்கள், அரசியல்வாதிகள் ரூபாய் நோட்டை ஏன் மாற்ற வங்கிக்கு வரவில்லை. திடுக்கிடும் தகவல்

பெரிய நடிகர்கள், அரசியல்வாதிகள் ரூபாய் நோட்டை ஏன் மாற்ற வங்கிக்கு வரவில்லை. திடுக்கிடும் தகவல்

India Currency Overhaulரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு வெளிவந்து இன்றோடு பத்து நாட்கள் ஆகிவிட்டது. இந்த பத்து நாட்களிலும் ஏழை, எளிய சாமான்ய மக்கள் மட்டுமே இதுவரை மணிக்கணக்கில் வரிசையில் நின்று காத்திருந்து புதிய நோட்டுக்களை பெற்று கொள்கின்றனர்.

அப்படியானால் பெரிய நடிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர்கள் இதுவரை ஏன் பணத்தை மாற்ற வரவில்லை என்ற கேள்வி எழுகிறது. சாதாரண நடுத்தர வர்க்கத்தினர்களிடமே ரூ.10000, ரூ.20000 பழைய நோட்டுக்கள் இருக்கும்போது கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ளவர்கள் ஏன் இதுவரை வங்கிக்கு அதனை மாற்ற வரவில்லை.

இதுகுறித்து நாடு முழுவதும் விரிவாக ஆய்வு செய்த ‘இன்டலிஜென்ஸ்’ ஆட்கள் அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்டுக்களை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்களாம். அனேகமாக இன்னும் ஓரிரண்டு நாட்களில் அதிர வைக்கும் புதிய அறிவிப்புகள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply