அதிமுகவை உடைக்க மோடி முயற்சி செய்யாதது ஏன்?
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் உடல்நலம் இன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாஜக நினைத்திருந்தால் அதிமுகவை கைப்பற்றி இருக்க முடியும் என்றும் ஆனால் மோடிக்கு ஜெயலலிதா மீது இருந்த நம்பிக்கை காரணமாக அதை செய்யவில்லை என்றும் பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு பாதகமாக மத்திய அரசு நடந்து கொண்டாலும், ஜெயலலிதா இதுவரை மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல், மத்திய அரசுடன் இணக்கமாகவே இருந்தார். அதேபோல் தான் தற்போது ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தாலும் தமிழக அரசு இணக்கமாக உள்ளது.
ஜெயலலிதா மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதாலும், அகில இந்திய அளவில் அவருக்கு தலைவர்களிடையே செல்வாக்கு இருக்கின்றது என்பதால் அவர் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் கட்சியை உடைத்து ஆட்சியை கைப்பற்றுவது சரியான நடவடிக்கையாக இருக்காது என்று மோடியும், அமீத்ஷாவும் முடிவு செய்ததாக பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.