நான் மினி ஸ்கர்ட் அணிந்தால் என்ன தவறு? பெண் சாமியாரின் ஆவேச கேள்வி
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராதே மா என்பவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருபவர். இவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு, தற்கொலைக்கு தூண்டிய வழக்கு உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் இவர் மினி ஸ்கர்ட் அணிந்தது போன்ற புகைப்படம் வெளியாகி இருந்தது. ஒரு பெண் சாமியார் ஆபாசமாக மினி ஸ்கர்ட் அணியலாமா? என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு பதிலளித்துள்ள ராதே மா “”நான் பக்தர்களுடன் சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது அவர்கள் மினி ஸ்கர்ட் உடையை என்னிடம் அளித்து அதை அணியுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களுக்காக அந்த உடையை அணிந்தேன். நான் அணிந்த மாடர்ன் உடை ஒன்றும் ஆபாசமாக இல்லை. அதை அணிந்ததில் என்ன தவறு உள்ளது? சாதுக்களும், சாத்விகளும் இப்படித் தான் ஆடை அணிய வேண்டும் என்று உங்களுக்கு யார் சொன்னது?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் பெண் சாமியார் ஒருவர் நடிகையை போல மினி ஸ்கர்ட் அணிந்து சாமியார்களின் புனிதத்தை கெடுத்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பக்தர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஒருசிலர் பெண் சாமியாருக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.