ரூ.3 கோடி செலவில் வைக்கப்பட்ட சீன தலைவரின் சிலை இடித்து தரைமட்டம்.
சீனாவில் மாவோ சே துங் என்ற மக்கள் குடியரசு கட்சி தலைவருக்கு ரூ.3 கோடி செலவில் வைக்கப்பட்ட பிரமாண்டமான தங்க சிலையை இடிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சிலையை வைக்க அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
சீனாவில் உள்ல ஹெனான் மாகாணத்தில் உள்ள கைபெங் நகரின் அருகே 36 மீட்டர் உயரத்தில் 30 லட்சம் யுவான்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் மூன்று கோடி ரூபாய்) செலவில் மக்கள் குடியரசுக் கட்சியின் தந்தையாகக் கருதப்படும் மாவோ சே துங் அவர்களுக்கு பிரமாண்டமான தங்கச்சிலையை உருவாக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடபெற்று வந்தது.
சீனாவை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் இந்த சிலை வைக்க நிதி அளித்திருந்தனர். இந்த சிலையை நிறுவும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த சிலையை அமைக்க அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை என்பதால் சிலையை இடிக்க உத்தரவிடப்பட்டது. அதற்கான பணிகள் நடந்து வருவதாக சீன ஊடகங்கள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.