சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கட்டிடத்தில் நடந்த புத்தக வெளியீடு நிகழ்ச்சிக்கு வேட்டி கட்டிக்கொண்டு சென்றதால் அவருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த கிரிக்கெட் சங்க கிளப்பின் மூத்த அதிகாரி ஒருவர், வேட்டி கட்டி வந்தால் மது பாட்டில்களை வேட்டிக்குள் மறைத்து வைத்து எடுத்து சென்று விடுவார்கள். அதனை தடுப்பதற்காகவே வேஷ்டிக்கு தடை விதிக்கப்பட்டது என முட்டாள்தனமான காரணம் ஒன்றை கூறியதால் தமிழக அரசியல் கட்சிகள் கடும் கோபம் கொண்டுள்ளன.
வேஷ்டி கட்டிக்கொண்டு செல்ல விடாமல் அனுமதிக்காததை விட அதற்கு அதிகாரி கூறிய காரணம் மிகவும் கேவலமானது என்றும், அவ்வாறு மதுபாட்டில்களை மறைத்து எடுத்து செல்பவர்களுக்கு தான் கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்துள்ளாதா? என்று கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும் பேண்ட் அணிந்து செல்பவர் மதுபாட்டில்களை திருடிச் செல்லமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? எனவே, இதுபோன்று நொண்டிச்சாக்கு கூறுவதை விட்டுவிட்டு இனி வேட்டிக்கு தடை விதிக்கமாட்டோம் என்று அறிவிப்பதே சிறப்பான முடிவாக இருக்கும் என்ற கோரிக்கை தமிழக அரசியல் கட்சிகளிடையே வலுத்ததுவருகிறது.