சேனல்கள் ரத்தாகும் என்ற செய்தியால் ஒரே நாளில் 25% வீழ்ச்சி அடைந்த சன் டிவி பங்குகள்

sun tvசன் டிவி குழுமத்தின் 33 சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டதாக நேற்று வெளிவந்த செய்தி பங்குவர்த்தகத்தில் பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்தியது. நேற்று ஒரே நாளில் சன் டி.வி. நிறுவனத்தின் பங்குகள் 25% வீழ்ச்சியடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளதால் சேனல்களின் ஒளிபரப்பு உரிமை ரத்தாகும் வாய்ப்பு இருப்பதாக செய்தி பரவியதால் சன் டிவி பங்குகளை வைத்திருந்த பெரும்பாலானவர்கள் விற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  சேனல்கள் ஒளிபரப்பு ரத்தாகும் என கூறப்படுவதால் பங்குச்சந்தையில் சன் டி.வி. பங்குகள் பெரும் சரிவைக் கண்டுள்ளதாக பங்கு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக சன் குழுமத்தின் 40 எப்.எம் வானொலி ஒலிபரப்புக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய அரசு மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை ரு.356.35  என்ற நிலையில் முடிவடைந்த சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகள் நேற்று ரூ.258 வரை சரிந்தது. ஷேர் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ரூ.100 குறைந்ததால் சன் டிவி நெட்வொர்க்கில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேனல்களின் உரிமை ரத்தானால் இன்னும் விலை வீழ்ச்சியாகும் என கருதப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த நிறுவனத்தின் பங்குகள் ரூ.450க்கும் மேல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply