சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதாவை கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்ய இன்று காலை ஏழு மணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தமுள்ள 152 அதிமுக எம்.எல்.ஏக்களில் 144 பேர் கலந்து கொண்டனர். எட்டு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. 8 எம்.எல்.ஏக்களும் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுவதற்கு வசதியாக கடந்த ஞாயிறன்று, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ஆர்.கே.நகர் வெற்றிவேல், சட்டப்பேரவைத் தலைவராக உள்ள ப.தனபால், உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தூர் பாண்டியன்,சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆகிய நால்வரும் இந்த கூட்டத்தில் கல்ந்து கொள்ளவில்லை.
மேலும், எம்.எல்.ஏ மற்றும் நடிகரான சரத்குமார், நாராயணன், செ.கு.தமிழரசன், உ.தனியரசு ஆகிய நான்கு பேரும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும், இவர்கள் அ.தி.மு.க.வின் உறுப்பினர்கள் அல்ல என்பதால் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.