என்கவுண்டர் ஏன்? சைபராபாத் காவல் ஆணையர் பேட்டி
ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் இன்று அதிகாலை கொலை நடந்த அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த என்கவுன்ட்டர் குறித்து விசாரணை செய்ய தேசிய மனித உரிமை கமிஷன் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் இன்று சைபராபாத் காவல் ஆணையர் செய்தியாளர்கள் முன் இந்த என்கவுண்டர் குறித்து விளக்கமளித்தார்
பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் கடந்த 10 நாட்களாக விசாரணை நடைபெற்றதாகவும், இந்த விசாரணையில் பல முக்கிய விஷயங்கள் கிடைத்ததாகவும், அதனை அடுத்து அவர்களை அந்த கொலையை நடித்துக் காட்ட அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறினார்.
ஆனால் அவ்வாறு நடித்துக் காட்டிக் கொண்டிருந்தபோது திடீரென அவர்கள் தப்பி ஓட முயன்றதாகவும் அவ்வாறு தப்பி ஓட முயன்றபோது கைதிகள் தாக்கியதில் இரண்டு காவலர்கள் காயம் அடைந்ததாக கூறினார். இதனை அடுத்து நான்கு பேரிடமும் சரணடைய கூறிய நிலையில் நான்கு பேரும் தொடர்ந்து தாக்கியதால் சுட்டுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கமளித்துள்ளார்