ஏன் இதுக்கெல்லாம் ஆதார் கேட்க மாட்டேங்குறாங்க!

ஏன் இதுக்கெல்லாம் ஆதார் கேட்க மாட்டேங்குறாங்க!

ஆதார் என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் ஆதாரம் என்றும், அனைவரும் கண்டிப்பாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன. மக்களுக்கான திட்டங்கள் சரியானபடி மக்களுக்கு போய் சேர இந்த ஆதார் அட்டை அவசியம் என்று கூறும் அரசு, ஒருசில முக்கிய விஷயங்களுக்கு ஆதார் அட்டையை கேட்காமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை

குறிப்பாக வாக்காளர்களுக்கு. போலி வாக்காளர்கள் பெருகிக்கொண்டே வரும் நிலையில் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைக்க வேண்டும் என்று இதுவரை கூறாதது ஏன்? கள்ள ஓட்டுக்கள் போட முடியாமல் போய்விடும் என்பதாலா?

இந்தியாவின் மக்கள் தொகையை விட கட்சிகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒரே நபர் பல கட்சிகளில் உறுப்பினராக உள்ளார். எனவே கட்சியில் உறுப்பினராக சேர ஆதார் அவசியம் என்றும் ஒரு கட்சியில் உறுப்பினர் ஆனவர் இன்னொரு கட்சியில் சேர முடியாது என்றும் கொண்டு வந்தால் என்ன?

அதேபோல் ஒரு கட்சிக்கு நிதி கொடுக்கும்போது ஆதார் அட்டை வேண்டும் என்று கூற மறுப்பது ஏன்? அனைத்து கட்சிகளுக்கும் நிதி கொடுக்க முடியாது என்பதாலா? இவையெல்லாம் சாதாரண பொதுமக்கள் கேட்கும் கேள்விகள். இதற்கு மத்திய மாநில அரசு பதில் சொல்லுமா?

Leave a Reply