எனது தோல்விக்கு இதுதான் காரணம். முதல்முறையாக மனம் திறக்கிறார் ஹிலாரி கிளிண்டன்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அனைத்து கருத்துக்கணிப்புகளும் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று கூறிய நிலையில் யாருமே எதிர்பாராமல் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
தனது தோல்விக்கு என்ன காரணமாக இருக்கும் என்று இதுவரை ஆய்வு செய்தவர் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். தன்னுடைய தோல்விக்கு எப்.பி.ஐ.யின் திடீர் குற்றச்சாட்டு மற்றும் ரஷ்யாவின் தலையீடுகள் ஆகியவை முக்கிய காரணம் என்பதை அவர் தற்போது ஆதாரங்களுடன் கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஹிலாரி கிளிண்டன், ‘என் பிரசாரத்தில் குறைகள் இருந்தன. ஆனால், அதிபர் தேர்தலில் நான் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. ஆனால், எப்.பி.ஐ திடீர் அறிவிப்பு, விக்கிலீக்ஸ் மற்றும் ரஷ்ய தலையீடு ஆகியவையே என் வெற்றிக்கு பாதகம் விளைவித்தன” எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அந்த அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்காக புத்தகங்கள் எழுதியுள்ளதாகவும் அவர் கூறினார். ஒரு குடிமகளாக தன்னுடைய பணியை நாட்டுக்கு சிறப்பாக செய்ய தயாராக இருப்பதாகவும் ஹிலாரி தெரிவித்துள்ளார்