காவிரி பிரச்சனைக்கான உண்ணாவிரத தேதியை அதிமுக மாற்றியது ஏன்> தங்கதமிழ்ச்செல்வன்

காவிரி பிரச்சனைக்கான உண்ணாவிரத தேதியை அதிமுக மாற்றியது ஏன்> தங்கதமிழ்ச்செல்வன்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது. ஆனால் இந்த உண்ணாவிரத தேதி முதலில் ஏப்ரல் 2 என அறிவிக்கப்பட்டு பின்னர் அது ஏப்ரல் 3 என மாற்றி அமைக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து கூறிய தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன், ‘மத்திய பா.ஜ.க. அரசு மைனாரிட்டி அரசாக இருப்பதால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதை தவிர்க்க அ.தி.மு.க. அரசு நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறது.

காவிரி பிரச்சினையை திசை திருப்புகின்றனர். நான் அடிப்பது போல் அடிக்கின்றேன். நீ அழுவது போல் அழு என்பது போல பா.ஜ.க. அரசிடம் அனுமதி பெற்றுதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசு ஸ்கீம் குறித்து விளக்கம் கேட்டுள்ளது. இதனால் அவ மதிப்பு செல்லாது. எனவே தமிழக மக்களின் ஜீவாதாரண பிரச்சினையான காவிரி நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழக மக்களின் மிக முக்கியமான பிரச்சினையாக காவிரி நதி நீர் பிரச்சினை இருக்கையில் கூட்டுறவு சங்க தேர்தலில் ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காகவே உண்ணாவிரதத்தை 2-ம் தேதியில் இருந்து 3-ந் தேதிக்கு மாற்றியுள்ளனர். இவ்வாறு தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்

Leave a Reply