தவறுகளை தட்டி கேட்பவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். விஜயகாந்த்

தவறுகளை தட்டி கேட்பவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். விஜயகாந்த்


vijayakanthதேமுதிக தலைவர் விஜயகாந்த் அடிக்கடி கோபப்படுவதாகவும், சில சமயங்களில் தனது சொந்த கட்சியினர் மீதே கோபப்பட்டு அடிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் தான் அடிக்கடி கோபப்படுவதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

‘நான் எதற்காக அடிக்கடி கோபப்படுகிறேன் என்று பலர் கேட்கின்றனர். இயற்கையாகவே தவறுகளை தட்டிக் கேட்பவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். அடிக்கிற கை தான் அணைக்கும். கோபம் இருக்கிற இடத்தில்தான் குணமும் இருக்கும். அதுபோலத்தான் நானும்’ என்று விஜயகாந்த் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், ‘5 ஆண்டுகள் மத்திய அரசில் திமுகவினர் பதவியில் இருந்தனர். அவர்கள் தமிழ்நாட்டுக்காக என்ன சாதித்தார்கள். இரண்டு கட்சிகளும் காசை கொடுத்து ஆட்சியை பிடிக்கின்றனர். நான் நாடகத்தனமாக இருக்க விரும்பாததால், முதல்வரை மருத்துவமனைக்குச் சென்று பார்க்கவில்லை. ஜெயலலிதா பூரண நலம் பெற்று மீண்டும் பதவியில் அமர்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை” என்று பேசினார்.

Leave a Reply