இளங்கோவன் ராஜினாமா செய்தது ஏன்? குஷ்புவுக்கு தமிழிசை பதிலடி

இளங்கோவன் ராஜினாமா செய்தது ஏன்? குஷ்புவுக்கு தமிழிசை பதிலடி

tamilisaiசட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ராஜினாமா செய்தது போல், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் ராஜினாமா செய்வாரா? என்று நடிகை குஷ்பு நேற்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள தமிழிசை செளந்திரராஜ, பா.ஜ.க.வை விமர்சிக்கும் தகுதி குஷ்புவுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழிசை மேலும் கூறியதாவது: ”தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்துள்ள நிலையில், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத பா.ஜ.க. தோல்விக்கு தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்வாரா? என்று குஷ்பு கூறி உள்ளார்..

குஷ்பு விமர்சனம் செய்யும் அளவுக்கு தமிழக பா.ஜ.க. இல்லை. அதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை. சட்டசபை தேர்தலுக்கு பொறுப்பு ஏற்று இளங்கோவன் ராஜினாமா செய்யவில்லை. அப்படி இருந்தால் தேர்தல் முடிவு வெளியாகிய உடன் அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். உள்கட்சி விவகாரத்தில் இளங்கோவன் ராஜினாமா செய்திருக்கிறார் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்த குஷ்பு, உரிய நேரத்தில் திறமையுள்ள ஒரு தலைவரை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தலைமை அறிவிக்கும் என்று கூறினார். குஷ்பு, தமிழக காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply