உணவுக்குப்பின் ஏன் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கின்றது?

7413755e-a2f6-4734-b291-97e64f9a03f4_S_secvpf

ஒரு ஆரோக்கிய மனிதன் உணவு உட்கொள்ளும் பொழுது சிறிதளவு சர்க்கரை அளவு உயரும். பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். கார்போஹைடிரேட் உணவை உட்கொள்ளும் பொழுது கணையத்திலிருந்து இன்சுலின் வருகின்றது.

இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் செல்களுக்கு சில நிமிடங்களில் அனுப்பிவிடும். அமைலின் என்ற ஹார்மோனும் வெளியாகும். இது வயிற்றிலிருந்து சிறு குடலுக்கு உணவு வேகமாக செல்வதனை நிதானப்படுத்தும். இதனால் சத்துக்களும் நன்கு உறிஞ்சப்படும். இன்சுலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையினை நீக்கி விடும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் போடுபவர்களுக்கு 15 நிமிடத்தில் வேலை செய்ய ஆரம்பித்து 60-90 நிமிடத்தில் முழு உயர்வில் வேலை செய்து 4 மணி நேர அளவில் இவ்வேலை முடியும். அமைலின் ஹார்மோன் சுரப்பது குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். ஆகவே உணவு வயிற்றிலிருந்து சீக்கிரமாகவே குடலுக்கு சென்று விடலாம்.

இதன் காரணமே சர்க்கரை அளவு ஏறுகின்றது. இப்படி ஏற்ற இறக்கங்கள் இருப்பதால் பிரிவு 1 சர்க்கரை நோயாளிகளுக்கு கண், கிட்னி இரண்டும் பாதிக்கும் அபாயம் அதிகரிக்கின்றது என்றும் பிரிவு 2 நோயாளிகளுக்கு இருதய நோய் பாதிக்கும் ஆபத்து இருக்கின்றது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவில் எந்த நேரத்திலும் உடலில் சர்க்கரையின் அளவு கூடும் பொழுது உடலில் சக்தி குறையும்.

மூளையின் செயல் திறன் குறையும். வேலை செய்ய முடியாத சோர்வு ஏற்படும். மனச்சோர்வும், கவனகுறைவும், டென்சனும் ஏற்படும். அதிக சர்க்கரை ரத்த குழாய்களை வீங்கச் செய்யும். எனவே பல முறை களூகோ மீட்டர் உதவியுடன் காலை, மதிய, இரவு உணவுக்கு முன்னும், உணவுக்கு 2 மணி நேர பின்னும் பரிசோதனை செய்வது உங்கள் வாழ்க்கை முறையினை மாற்றிக் கொள்ள வழிவகுக்கும்.

பொதுவில் உணவு உண்ட ஒரு மணி நேரத்தில தான் சரக்கரை கூடிய நிலையில் இருக்கும். பிரிவு 1 பாதிப்புடையோர் மருத்துவ உதவியுடன் சரியான அளவு இன்சுலின் எடுத்துக் கொள்வதும், பிரிவு 2 பாதிப்புடையோர் சரியான மருந்து, உணவுமுறை இருந்தால் வாழ்க்கை எளிதாகும்.

Leave a Reply