இந்தியாவின் ஏவுகணை நாயகன் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நேற்று முன் தினம் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருடைய உடல் நேற்று டெல்லியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை அப்துல்கலாமின் சொந்த ஊரான ரமேஸ்வரத்தில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள நிலையில் தமிழக முதல்வர் அந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தன்னுடைய உடல்நிலை காரணமாக அப்துல்கலாமின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லையென தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அவருக்கு பதிலாக அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன்,சுந்தர்ராஜ், ஆர்.பி. உதயகுமார் போன்ற அமைச்சர்களும் இறுதிச்சடங்கில் பங்கேற்கவுள்ளனர்.
ரமேஸ்வரத்தில் நாளை காலை 11 மணியளவில் அப்துல்கலாமின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி மற்றும் பல மாநில முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.